Breaking News

சில சில….கவிதை மஞ்சு மோகன்

சில தருணங்கள்
சில சந்தர்ப்பங்கள்
சில அனுபவங்கள்
சில துரோகங்கள்
சில நம்பிக்கைகள்
சில ஏமாற்றங்கள்
என
சிலர் வாழ்க்கையில்
சிந்திக்காமல் கடக்க
முடிவதில்லை
ஏனெனில்
“ சில“ என்ற ஒற்றை சொல்
பல அர்த்தங்களை
விதைத்து விட்ட
மனங்களையே நாம்
விளைய வைத்துக்
கொண்டிருக்கிறோம்…

                                                                                         ஆக்கம் மஞ்சு மோகன்

leave a reply