Breaking News

நன்றி கலைவெள்ளமே நன்றி

திறமையுள்ளவரை
தன் நெஞ்சிலுள்ளவரை
தகுதிவாய்ந்தவரை
கலையோடு கரைந்தவரை
தன்முகநூலில் பதிந்து
பாராட்டும் கலைவெள்ளமே
இந்திரனையும் பாராட்டிவாழ்த்தி
கவியாக்கி உயர்த்திய உள்ளமே
உங்கள் வாழ்த்து எனக்கு விருது
எத்தனை பேருக்கு இதுகிட்டும்
முகம்தெரியாதவர்களை முகவரி
கொடுத்து மேடையேற்றும்பண்பு
உங்கள் தாராளமனமே அண்ணனே
உங்கிட்ட நில்லாதவர்- கலை
இருந்தும் இல்லாதவரே
நீங்கள் நிறைந்த கலைவெள்ளமே
அழியாத கலை உள்ளமே
வாழ்க பல்லாண்டு
அழியாது உங்கள் கலைத்தொண்டு

மயிலையூர்இந்திரன்

leave a reply