Breaking News

ஆரவாரம் இன்றி !கவிதை தே.பிரியன்

மதுவை ஒருபகுதி
மனசார விரும்புகிறது
போதை மயக்கம் தாங்கி
தீபாவளி கொண்டாடவாம்

உறவு ஒருபக்கம்
என் சொந்தக்காரர்கள்
இன்றாவது வருவார்களா
என்ற ஏக்கத்துடன்
ஆயத்தம் தீபாவளி
கொண்ட

இன்னொரு பகுதி
திரையரங்கை
திருப்திபடுத்துவதற்தாக
ஆயத்தம் தீபாவளி
கொண்டாடவாம்

எது எப்படி நடந்தாலும்
இரண்டு பலகாரம்
சிறு மகிழ்ச்சி
வீட்டு சாப்பாடு
விரும்பும் ஒரு
பகுதி செலவின்றி
ஆயத்தம் ஆகின்றது
ஆரவாரம் இன்றி
தீபாவளி கொண்டாட

ஆக்கம் தே.பிரியன்

leave a reply