Breaking News

அன்பு!கவிதை ஜெசுதா யோ

ஓலைக் குடிசைக்குள்
மிதமாக இருந்த அன்பு
ஓட்டு வீட்டில்
உடைந்தே போனது..

ஆளுக்குகொரு அறை
அருகில் யாரும் இல்லை
குளிர்ந்தால் இதமான சூடேற்றி அருகிலிருக்கிறது
வெயிலுக்கு சூடு தணிக்கா
குளிரூட்டியும் பக்கம் இருக்கிறது

ஆனால்
கதைசொல்ல
அம்மாவும் அருகில்லை
அடிபட்டு விளையாட
அண்ணன் தங்கைகளும்
அருகில்லை

சந்தோசமும் இங்கில்லை
அண்ணன் தம்பி கூட
அருகிருந்தும்
தொலைவாகிப்போனர்
உள்ளத்தால்..
நிம்மதியும் எங்களுக்கு
தொலைவாகிப் போனது…
இதையெண்ணியே
மனங்கள் பல இங்கு வாடுது..

  ஆக்கம் ஜெசுதா யோ

leave a reply