Breaking News

பட்டறைகள்…

நேற்றுப் போல்
நினைவுகள்..
காற்றோடு கரைந்த
கனவுகளாச்சு..

நினைக்கையில்
நீளுது..அன்று
அக்கம் பக்கம்
அக்கா தங்கையர்..

கூடிக்குலவி
குடில் அமைத்து
கார்த்திகை மாத
விளக்கீட்டு சுட்டிகளில்…

மண்சோறு கறியாக்கி
பகிர்துண்பது போல்
அப்பா அம்மாக்கான
வேட ஒத்திகைகள்…

விளையாட்டு வினோத
வேடிக்கையானாலும்
கண் பார்க்க
கை வேலை செய்யும்
பயிற்சி பட்டறைகள்….

தொலைந்து போனது
பாத்திர பண்டங்கள்
மட்டுமில்லை.பாரம்பரிய
சமையல் கலையும் தான்…

leave a reply