Breaking News

*****முடித்து வைப்போம்****

இணைத்து வைத்து இன்பம் கண்ட
இணையத் தளமது,இன்றோ இழிவானது.
அனைத்து உறவுகளையும் அன்புறவாக
அணைத்து அன்பு காட்டிய ஆசை முகமது.
நாலைந்து நபரின் நாச வேலைகளால்
நனைந்து நிற்கிறது நாற்றத்து எரியிலே.
தனையர் சிலரின் தவறான பாவனையால்
தனை இன்று தரமிறக்கித் தவிக்கிறது.
வீணான வார்த்தைகள் விடுவது சுலபம்
வினையை அறுக்கும் போது வலி நமதே.
பிணக்குகள் வேண்டாம் பிரிவுகளை தரும்.
பிணைந்து பண்பாகபாசமுகம் காட்டுவோம்
முனையுங்கள் ஒன்றுபட
முகநூல் உறவுகளே
முன்னோர் செய்த தவறை
முடித்து வைப்போம் நாம்.
முக நேசன்

leave a reply