Breaking News

உன்னைப் பார்க்க ஆசை!கவிதை ஜெசுதா யோ

எனக்கென இருக்கும்
ஒரு சொந்தம்
என் உயிர்வரை
உள்நுழைந்த பந்தம்
உடலோடு உள்ளமும்
உன்னிடம் தஞ்சம்
என்னிடம் இருப்பதெல்லாம்
உன் நினைவுகள் மட்டுமே மிச்சம்
என்னவனே உன்னைப்
பார்க்க பார்க்க ஆசை தூண்டும்?
உன் அன்பில் சுவாசம் காணும்
இன்னும் வேண்டும்
உன் அன்பு மட்டுமே ?
அதுவரை நான் உன்னிடமே

leave a reply