Breaking News

தமிழ்ப்பிரியனின்“ஈர்ப்பு „முழுநீள திரைப்படப் படப்பிடிப்பு 04.02.2018

பிரான்ஸ் ARC MOBILE நிறுவனம் தயாரிக்க நட்சத்திர படைப்பகம் „தமிழ்ப்பிரியனின் எழுத்து இயக்கத்தில் „ஈர்ப்பு „முழுநீள திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று 04.02.2018 பிரார்த்தனைகளுடன் பிரான்ஸில் ஆரம்பமானது!!

இப்படத்திற்கான ஒளிப்பதிவை கோபி சண்ணும்,படத்தொகுப்பை : சங்கர் தேவாவும் கவனிக்கிறார்கள்.

படத்தில் சுதன்,கிருஷாந்தி,கமலவேணி,தயா பஸ்கி,மாறன், கே.பி.லோகதாஸ், ஆகியோருடன் இன்னும் பலர் நடிக்கவுள்ளார்கள்!

இவ்வொளிப்படம் „ஈர்ப்பு „படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது.

அதேநேரம் படப்பிடிப்பு தளத்திற்கு நேரடியாக வந்து அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் „ஏணை“பட இயக்குநர் அஜந்தன்.

நமக்கான சினிமாவை நாமே வளர்ப்போம் என்ற வேகத்தோடு பணியாற்கிறார்கள் „ஈர்ப்பு „படப்பிடிப்பு குழுவினர்.

இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் „ஈர்ப்பு „திரைப்படம் திரைக்குவருமென அதன் தயாரிப்பாளர்களான ARC MOBILE நிறுவனம் தெரிவிக்கிறது.

leave a reply