Breaking News

திருமதி கமலினி கதிர் அவர்களின் இரண்டு நூல்கள் 3.2.18 வெளியீடு செய்யப்பட்டன!

சமூக மாற்றமே….

புலம்பெயர் நாடுகளில் பல்வேறு கலாச்சார விழாக்கள் “தமிழர் “ என்பதன் அடையாளக்குறியாக இருந்து வருகின்றது.

சனியும்,ஞாயிறும் என்றால் திருமண விழா,பூப்புனித நீராட்டு விழா,பிறந்ததின விழா,புதுமனை புகுவிழா…என்ற அழைப்பிதழுக்கு பஞ்சமேயில்லை.

இந்த பட்டியலில் “நூல்வெளியீட்டு விழா” என்ற ஒன்றும் அண்மைக்காலமாக இடம் பிடித்து வருகின்றன.

நல்லதொரு ஆரோக்கியமான மாற்றமாக இலக்கிய ஆர்வலர்கள் மகிழ்கின்றனர்.

மற்ற விழாக்களைப் போல அழைப்பிதலுக்கு மதிப்புக்கொடுத்து கூட்டம் வரவில்லையென்றாலும் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர் எண்ணிக்கை குறையவில்லை என்பதனை மண்டபத்தில் ஓரளவு இடம் பிடித்திருக்கும் தலைகள் உணர்த்துகின்றன.

காலத்திற்கேற்ப மாற்றமும் நூல்வெளியீடுகளிலும் அவசியமாகின்றன என்பதனை உணர்கின்றேன்.

சபையில் உள்ளோர் தொடர் பேச்சுக்களை இரசிப்பதில் சோர்வு நிலையடைகின்றனர். இதனால் இடையிடையே நடனம்,நாடகம்,பாட்டு…போன்ற முத்தமிழும் தேவைப்படுகிறது முகம்மலர…

கசப்பு மாத்திரைக்கு இனிப்பு பூச்சுப்போல …

மறக்கப்பட்டுவிடுமோ? என்று அஞ்சுகின்ற நல்ல விடையங்களுக்காக சில விதிமுறைகளை மாற்றுவதில் தப்பில்லைதானே..!

ஏதோ பேச்சு வாக்கில் சொல்லவந்ததை மறந்துவிட்டன்…..?

3.2.18 அன்று ஓபர்பகிளாட் பகுதியில் பிற்பகல் 14:00 மணிக்கு திருமதி கமலினி கதிரின் கருவறையிலிருந்த இரட்டைக்குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்தோடு பூமியைத் தொட்டன.

உயிரோட்டமான உணர்வோடு ஒரு கருவும்…
கருவைச்சுற்றிய கற்பனையோடு இன்னொன்றுமாக…
இரண்டின் முகத்தோற்றமும் என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.

இரண்டின் அடையாளங்கள் வேறுபட்டாலும் மொழியாலும்,இலக்கிய வரம்பாலும் தமக்கான பெயர்களை இவ்வாறு குறித்துக்கொண்டன.

1.சிறுகதை
2.கவிதை

ஆமாம்!
திருமதி கமலினி கதிர் அவர்களின் இரண்டு நூல்கள் வெளியீடு செய்யப்பட்டு தமிழார்வலர்களால் கொண்டாடி மகிழப்பட்டது.

எழுத்தாளன் பிறப்பதில்லை !
மாறாக சமூக கலாச்சார விழுமியப் பண்பாட்டு காரணங்களின் இயல்பும்,மாற்றங்களும்,சிதைவுகளும் எவனது சிந்தையை கிளறி தவிக்கவிடுகிறதோ அவனது கைகள் பேனாவைத்தொடுகின்றன.அவனே எழுத்தாளனாகின்றான்.

இந்த நியதியில் ஒரு தாய்,ஆசிரியை , மற்று யாவாரலும்
“அம்மா “ என்று மதிப்போடு அழைக்கப்படும் பெண் தனக்கான அடையாளத்தை எழுத்தாளராகவும்,கவிதாயினியாகவும் தக்கவைத்துள்ளார்.

1.ஒரு வீணை அழுகின்றது …
(சிறுகதைத் தொகுதி)

2.எந்தன் குரல் கேட்கிறதா ?
(கவிதைத் தொகுதி)

இரண்டுமே பலதரப்பட்ட போராட்டங்களை தமக்கான இலக்கண ,இலக்கிய விதிக்குள் தக்கவைத்துள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இலக்கியம் சார்ந்தவர்களுடன் இனிய பொழுதைக் கழித்தது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது .

இரு நூல்களுக்குமான அறிமுகவுரை கவிஞர் எழுத்தாளர் ஆசிரியர் சமூக ஆர்வலர் மதிவாணதி அவர்கள்

leave a reply