Breaking News

திருமதி.சிபோகி சிவகுமாரன் (ஜேர்மனியில் திரைப்பட குறும்பட பெண் இயக்குனர்)

ஜேர்மனியில் திரைப்பட, குறும்பட பெண் இயக்குனராக இருந்து வருபவர் சிபோகி சிவகுமாரன்.

இவர் தமிழாலய மாணவியாக இருந்த வேளை மிகவும் சுறுசுறுப்பான மாணவியாக இருந்தது மட்டுமல்ல பேச்சுப் போட்டிகளில் பரிசுகளை பெற்றவருமாவார். நடனத்தைக் கற்றுக் கொண்ட இவர் தமிழாலய விழாக்களில் நடனமாடியுமிருக்கிறார்.

திருமணத்திற்குப் பின்னர் (Visual Communication) திரைப்பட தொழில்நுட்பக் கல்வியைக் கற்றக் கொண்ட இவர் கணவரின் உதவியுடன் பிராங்பேர்ட் நகரில் வாழ்ந்த காலங்களில் பல காணொளி நாடகங்களையும்குறும்படங்களைத் தயாரித்தது மட்டுமல்ல ஒரு முழு நீளத் திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டவர்.

சுறுசுறுப்புப்தொடர்ச்சியான செயல்பாடு கணவரின் பிள்ளைகளின் முழு ஒத்துழைப்பு மூலமாக ஆர்வமாக குறும்படங்களை தயாரித்து வரும் இவர்முழுநீளத் திரைப்படம் தயாரிக்கும் முயற்சி ஒன்றினை மேற்கொள்வதற்கு முன்பாக ஒரு குறும்படத்தைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றார்.

நேற்றைய தினமும் அதற்கு முந்தைய தினமும்(03,04.02.18) படப்பிடிப்பு நடைபெற்றது.
நேற்றைய தினம் படப்படிப்பை பார்க்கச் சென்றிருந்தேன். குறும்படத்தைத் தயாரிப்பது சுலபமான வேலை என இதுவரைநாள் எண்ணிக் கொண்டிருந்த நான் திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பது போன்றதே குறும்படம் தயாரிக்கும் வேலை என்பதை நேற்றைய தினம் கண்டு கொண்டேன்

தான் கற்பனை தசெய்து வைத்திருந்த கதாபாத்திரத்தின் குணவியல்புகளளை உணர்வுகளை உணர்ச்சிகளை எவ்வித சமரசமுமின்றி வெளிக் கொணர்வ்தில் விடாப்பிடியாக அவர் திரும்பத் திரும்ப அந்த வடிவமைப்பில் திருப்தி ஏற்படும் வரை நடிகர்களை நடிக்க வைத்ததையும் வசனங்களை உணர்வுடன் பேச வைக்க அவர் எடுத்துக் கொண்ட சலிப்படையாத முயற்சியைக் கண்டு நான் மகிழ்ச்சியுடன் வியப்படைந்தேன்.

தான் சொல்லிக் கொடுக்கும் வசனங்கள் தவிர்த்து நடிகர்கள் பேசி நடிக்கும் போது ஏதேச்சையாக வரும் மேலதிக வசனங்களை பேச வேண்டாம் என அவர் அன்பாகவும் கண்டிப்பாகவும் கேட்டுக் கொண்டார்.

புலம்பெயர் நாடுகளில் திருமணத்திற்குப் பின்னர் எத்தனையோ பெண்கள் தமது ஆளுமைகளை கணவன்மாரின் தாழ்வுமன்ப்பான்மையாலும் காழ்ப்புணர்வினாலும் தம்மைவிட தமது மனைவி கெட்டிக்காரியாக இருக்கக்கூடாது என்ற இழிவான எண்ணத்துடன் செயல்படுவதை தொடர்ந்தும் கண்டு வருகின்றோம்.

இதற்கு முற்றிலும் மாறாக சிபோகியின் கணவர், ஒளிப்பதிவாளராக இருந்து கொண்டு தனது மனைவியின் ஆளுமைகளை வளர்த்துவிடுவதில் பக்கபலமாக இருப்பதை நான் கவனித்தேன்.
இத்தம்பதிகள் தமது பிள்ளைகளை இசைத்துறையில் ஈடுபடுத்தி வருவதும் ஒரு சிறப்பம்சமே.

நான் அவரிடம் காணப்பட்ட ஆளுமையை உற்றுக் கவனித்த போது அவர், ஒரு காட்சி எப்படி அமைய வேண்டும் தான் நினைப்பது பொல அமைந்தால்தான் காட்சி என்ன செய்தியை கூறுகின்றது என்பதை படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள் இரசிப்பார்கள் என்பதை நடிகர்களிடம் விளக்கிக் கூறியதை கவனித்த போது ஒரு இயக்கனருக்குரிய தகுதியை அவரிடமிருந்து காண முடிந்தது.

பொருளாதார தொழில்நுட்ப ஆளணி ஒத்துழைப்பு அவருக்கு இருக்குமாயின் பாராட்டக்கூடிய திரைப்படங்களை அவரால் தொடர்ந்து தயாரிக்க முடியம் என்பது எனது உறுதியான எண்ணமாகும்.

அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்தைத தெரிவிக்கிறேன் என்கின்றார் எழுத்தானர் ஆய்வாளர் நடிகர் க.முருகதாஸ்

இவரின் வளச்சி சிறக்க வாழ்த்துகின்றது எஸ் ரி எஸ் தமிழ் இணையத்தொலைக்காட்சி, stsstudio.com,இணைநிர்வாகமும்

leave a reply