Breaking News

***விமர்சனங்களை விரட்டியடி***

மடிந்துவிடலாமோ எனத்தோன்றும் எனக்கு,
மடத்தனமான மற்றவர்பேச்சுக்களை கேட்க.
இடிந்துபோவேன் பலவேளைகளில் எந்தன்
இனசனத்தின் இழிவான ஈரமற்ற பேச்சால்.
படிந்து போகும் பத்திரமாக என்மனத்திலே
பாதகர்களின் பரிகாசமான பேச்சுக்கள் .
கடிந்து கொள்ளத் திராணி அற்றவனாக,
காரணமின்றி கேட்டுக்கொண்டிருந்தேன்.
முடிந்து போனது என் மூடப்பழக்கமின்று,
மூட்டைகளை அவிழ்த்து மனதைதிறந்தேன்.
விடிந்தது வாழ்வு விரோதங்கள் அகன்று
விமர்சனங்களை விரட்டியடி,விடியும்வாழ்வு
…விடியல் நேசன்

leave a reply