Breaking News

பிரான்ஸ்சில் „அமுதவேளை“21.04.18 சிறப்பாக நடைபெற்றது!!

21.04.18 (இன்று)பிரான்ஸ் தமிழர் விளையாட்டுக்கழகம் 93 நடாத்திய „அமுதவேளை“என்னும் கலைநிகழ்வு பிரான்ஸ் செவ்ரோனில் !
இவ்நிகழ்வில் பாரிஸ் முன்னணி நடன ஆசிரியர்களின் நெறியாள்கையில் நடனநிகழ்சிகள்,

தேசிய விடுதலைப்பாடல்களுக்கு விருது பெற்ற பாடகர்களின் இசைச்சங்கமம் அத்தோடு சுவிஸிலிருந்து சிறப்பு பாடகியாக செல்வி சுதர்சன் அம்றிதா கலந்து சிறப்பித்து நிகழ்வுக்கு அழகு சேர்த்திருந்தார்.

இவைகளோடு பலரின் சிறப்புரைகள் போட்டியாளர்களுக்கான பரிசளிப்புகள் மற்றும் பாரிஸ் பாலம் படைப்பகம் J.A.சேகரனின் எழுத்து இயக்கத்தில் உருவான „கிக்கிக்கு முன் கிக்கிக்கு பின்“ „அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம்“ஆகிய நகைச்சுவை நாடகங்களும், இன்னும் பல கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் வினோத் தொகுத்து வழங்கினார்.

அவ் நிகழ்வின் ஒளிப்படங்களின் குவியல்கள் இது::::::(K.P.L)

leave a reply