மோதல் செய்து வென்று நின்றாய்
ஈதல் செய்து என்னை இழந்தேன்
சாதல் முடிவிலும் உன்னோடு என்றாய்
மலரைத் தொட்ட வண்டு போல
மனதைத் தொட்டு கவர்ந்தாய் என்னை
கயல்விழி என்று கண்களால் காதல் செய்து சிந்தையில் நிலைத்தாய்
கற்றுத் தேர்ந்த கவின்கலை எல்லாம்
முற்றும் உன்னில் மோகனம் என்றாய்
கூந்தல் பற்றிப் பாடி காந்தள் மலரென்று நுகர்ந்து சென்றாய்
சீதனம் கேட்டு சிந்தையை வாட்டி
சேராத காதல் என்று சேதி சொல்லி
தூது விட்டு பெரும் சோகம் தந்தாய்
காதலா இது காதலா என் காதலனே
சுபாரஞ்சன்
காதலா ❤️

Posted in: