Breaking News

இவர்களால்..


திரை
நட்சத்திரங்களின்
நிழல்
படங்களை
சுவர்களில்
மாட்டாதீ்ர்….
நரை
விழுந்தாலும்
அன்பில்
திரை விழாத
அற்புத ஜோடிகள்
இவர்கள்.
உங்கள்
மனச் சுவர்களில்
இவர்களை
மாட்டுங்கள்.
காட்டுங்கள்
சந்ததியினர்
விழிக்கட்டும்….
முடிச்சு
போட்டு மூன்று
நாள் முடிவதற்குள்
எல்லாம்
எப்படியெல்லாம்
முடிகின்றது….
ஊடலும்
கூடலும் இவர்கள்
வாழ்வில்
தொடர்வது
கண்கூடாகும்..
விந்தையில்லை
சிந்தையில்
நிறுத்துங்கள்
எந்தையர் வாழ்வினை
புரட்டுங்கள்….
பரஸ்பரம்
ஒன்று தான்
இவர்களின்
மந்திரமாகும்
தந்திரங்களை
இவர்களிடமே
கேட்டறிதல் சிறப்பாகும்..

ரி.தயாநிதி

leave a reply