Breaking News

ஆசையுடன் ஓர் முத்தம்…

 

காதலுடன் ஓர் முத்தம்
கையோடு கைசேர்த்து
இதயங்கள் பேசுகின்ற
இதயத்து மொழிதானோ
இச்சென்ற இந்த முத்தம்…

புயலுக்குப்பின் அமைதியாய்
ஊடலின் பின் கூடலாய்
உச்சென்ற உதட்டு முத்தம்
உனை சேர்த்து வைக்கும்
ஆசையுடன் ஓர் முத்தம்..

மங்கையின் முகம் பார்த்து
மகிழ்வுடனே ஓர் முத்தம்
உயிர்தொட்டு இனித்திருக்கும்
உணர்வுகளில் நிறைந்திருக்கும்..,

யுத்தமொன்றை சத்தமின்றியே
யௌவனமாய் நடாத்திச்செல்லும்
உரிமைக்கான முத்திரையாய்
உன்னதமாய் சுவைக்கின்ற
ஓர் ஆசை முத்தம்…

ரதி மோகன்

leave a reply