Breaking News

பொத்துவில் அஜ்மல்கான்

ஆடம்பர கைபேசியின்
அத்தியவசிய அடிமையாய்
மனிதன் உருவெடுத்து
விட்டான் இன்று!

மூக்கணாங்கையிறு இட்டு
முதுகில் ஊர்வலமாய்
வருகின்றது அடிமையான
மனிதனை மாடாக
எண்ணி!

அதிசயங்களைப் பார்த்து
வியந்த மானிடங்கள்
கைபேசினைப் பார்த்து
பயந்து நடங்குகின்ற
காலம் நகர்ந்து
வந்துவிட்டது இன்று!

அடிமைப் பெண்ணின்
பேச்சுக்கள் குறைந்து
அடிமை கைபேசியாக
மாறிவிட்டதடா காலம்!

கரைந்து போகும்
வாழ்க்கையில் நிமிர்ந்து
போக வழிகள்
கிடைக்கவில்லை வலிகளைத்
தவிர!

பொத்துவில் அஜ்மல்கான்

leave a reply