Breaking News

முடி சூடும் எங்கள் தமிழ்!

அன்னையவள் கருவதிலே
அறிந்திட்ட எந்தன் தமிழ்
அறிவோடு வீரத்தையும்
புகட்டிட்ட அன்னைத் தமிழ்

உலகத்தின் மூத்தவராய்
உயர்ந்தே நிற்கும் தமிழ்
காலத்தை வென்றிட்ட
காவியத்து வீரத்தமிழ்

கன்னியரின் பார்வையிலே
காதலாய் தவழும் தமிழ்
நால்வகைக் குணங்களும்
நயக்கின்ற கன்னித்தமிழ்

அடிமைத் தளையறுக்க
ஆர்ப்பரிக்கும் ஆண்மைத்தமிழ்
நெஞ்சினில் வடுவேந்தி
நிமிர்கின்ற வீரத்தமிழ்

உயிராகி உணர்வாகி
எனக்குள்ளே கலந்த தமிழ்
வருங்காலம் தன்னிலே
முடி சூடும் எங்கள் தமிழ்

வன்னியூர் இனியவள்

 

 

leave a reply