Breaking News

திரு.இலங்கேஸ்வரன்பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் பிசி இணைய மற்றும் சமூக ஊடக நிறுவனத்தின் அதிபர் திரு இலங்கேஸ்வரன் தர்மலிங்கத்தின் நிறைவான சமூக ஈடுபாடு மற்றும் ஊடகத்துறை பங்களிப்பு ஆகியவற்றுக்காக அவருக்கு பல இடங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக கடந்த வார இறுதி நாட்களில் ரொரன்ரொ பெரும்பாகத்தில் உள்ள பல ஆலயங்கள், இசை சார்ந்த நிறுவனங்கள் சமூக அமைப்புக்கள் ஆகியவை நடத்திய பல வைபவங்களில் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு மற்றும் பொன்னாடைகள் மற்றும் சான்றிதழ்கள்; ஆகியவை வழங்கப்பெற்று கௌரவிக்க்பபட்டார்.

கணக்கியல் துறையில் பட்டம்பெற்று உயர் பதவி வகிக்கும் திரு இலங்கேஸ்வர்ன தர்மலிங்கத்தின் பன்முக ஆற்றல் ஓரே நேரத்தில் புகைப்படங்கள் எடுத்தல் , நேரடி ஒளி பரப்பு (முகநூல் ஊடாக) மற்றும் செய்தியாக்கம் ( ) ஆகியவற்றால் இவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு வழங்கப்படுகின்றது. 
தொடர்ந்து இவர் மிகுந்த அவதானமாக தன்னுடைய பணிகளைச் செய்து தொடர்ந்து நல்ல பாராட்டுக்களைப் பெற வேண்டும் என்று வாழ்த்துவோம்

leave a reply