Breaking News

குறும்புத்தனம் கொண்ட பேரழகி!

தங்க நிலவு நெஞ்சில் மலரே
பிஞ்சு உறவு என்னுள் அழகே
கொடியில் மலர்ந்தவளே
தொப்புள் கொடியில் மலர்ந்தவளே

கள்ள சிரிப்பில் களவாடினாய்
மழலை மொழியில் விளையாடினாய்
உந்தன் புன்னகை பேரழகே
எந்தன் கண்ணில் நீயழகே

அம்மாவின் சாயலடி
அன்பில் ஆளும் சேயடி
பிஞ்சு கைகள் பற்றிட வேண்டுமே
கொஞ்சும் மொழி கேட்டிட தோணுமே

குறும்புத்தனம் கொண்ட பேரழகி!
——————————————-
✍🏻பவளம் பகீர்.

leave a reply