Breaking News

ஸ்காபுறோ சிறப்பாக வேலாயிமவன்-2′ ஆர்மேனியன் மண்டபத்தில் இறுவெட்டு வெளியிடப்பட்டது

கடந்த சனிக்கிழமையன்று 4ம் திகதி மாலை ஸ்காபுறோ ஆர்மேனியன் மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்ற வெளியீட்டு விழாவில் வெளியிடப்பெற்ற ‚வேலாயிமவன்-2‘ இறுவெட்டில் அடங்கியுள்ள பாடல்களை பாடிய கனடிய பாடகர்கள், இறுவட்டை தயாரிப்பதில் முன்னின்று உழைத்த தமிழகத்துப் பாடகர் வி.எம் மகாலிங்கம் மற்றும் இறுவெட்டு தயாரிப்பிற்காக நிதிப் பங்களிப்புக்களையும், தங்கள் பொன்னான நேரத்தையும் செலவு செய்த வர்த்தகப் பிரமுகர்கள் திருவாளர்கள் சங்கர் நல்லதம்பி,(Vibrant Hospitality Group) ரமேஸ் WYN Entertainment Ltd)மற்றும் ரூபன்(Universal Vocals),ஆகியோரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பையும் அவர்களது தாராள குணத்தையும் நாம் பாராட்ட வேண்டும்.
அன்றைய வெளியீட்டு விழாவையும் அதற்;கு முன்னர் இறுவட்டு தயாரிப்பில் வெற்றிகளை ஈட்டி ஒரு தரமான இறுவட்டில் கனடாவில் வாழும் இளம் பாடகிகள் தமிழ்நாட்டு கவிஞர்களின் பாடல் வரிகளைப் பாடியும் பாடல்களுக்கு இசையமைத்த தமிழகத்து இசையமைப்பாளர்களின் எதிர்பார்பிற்கு ஏற்ப இந்த இறுவட்டு வெளிவந்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்

இங்கு இந்த வேலாயிமவன்-2 இறுவட்டு வெளியீட்டிலும் தயாரிப்பிலும் தங்கள் நிதியையும் நேரத்தை ஒன்றுபட்டு அர்ப்பணி;த்தவர்களான வர்த்தகப் பிரமுகர்கள் திருவாளர்கள் சங்கர் நல்லதம்பி, ரமேஸ் மற்றும் ரூபன் ,ஆகியோரின் கூட்டு முயற்ச்சி வெற்றிகரமாக ஈடேறியது என்பதையும் கனடா வாழ் இளம் பாடகிகளின் ஆற்;றலை வெளிக்கொணர்ந்து, இந்த இறுவட்டில் அடங்கியுள்ள பாடல்களில் சிறந்தவையாக கருதப்படுகின்றவை, சில வேளைகளில் தென்னிந்திய திரைப்படங்களில் சேர்த்துக் கொள்ளப்படக் கூடியவை என்ற உற்சாகம் தரும் அறிவிப்புக்களையும் நாம் கேட்கின்றபோது, கனடா வாழ் தமிழ் மக்கள் தங்கள் ஒவ்வொருவரின் தலையையும் நிமிர்த்திக் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் இவ்வேளையில் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றோம்.

இனி இறுவட்டு வெளியீட்டு விழா பற்றி குறிப்பிடுவோமானால் 4ம் திகதி சனிக்கிழமையன்று மாலை 5.30 மணிக்கு ஆர்மேனியன் இளைஞர் கழகத்தின்; அழகிய மண்டபத்தில் ஆரம்பமாகிய இந்த விழாவிற்கு தொகுப்பாளராக வானொலி அறிவிப்பாளர் ஜெய் அரவிந்த் அழைக்கப்பெற்றிருந்தார்.
அவரது ஆரம்ப உரையோடு விழா ஆரம்பத்திதற்குரிய அனைத்து விடயங்களும் இடம்பெற்று இந்த இறுவட்டு தயாரிப்பு பணியில் ஆரம்பம் முதல் இறுதிவரை முன்னின்று உழைத்த பிரபல பாடகர் வி. எம். மகாலிங்கம் மேடையில் தோன்றி இறுவட்டில் அடங்கிய பாடல்களைப் பாடிய இளம் பாடகிகளையும் தொடர்ந்து அன்றைய விழாவில் இசைக்குழுவோடு பாடல்களைப் பாடிய ஏனைய பாடக பாடகர்களோடும் மிகவும் உற்சாகமாக சபையோர் அனைவருக்கும் தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்த ‚வேலாயிமவன்-2‘ இறுவட்டு வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக ‚இன்னிசை வேந்தர்‘ பொன் சுந்தரலிங்கம் அழைக்கப்பெற்று மேடையில் கௌரவிக்கப் பெற்று தொடர்ந்து உரையாற்றி தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் தனது உரையில் கனடாவில் வாழும் இளம் பாடகிகள் எட்டுப் பேர் தமிழ்நாட்டு கவிஞர்களின் பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்திருப்பது அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தைத் தேடிக்கொடுக்;கும் என்ற வாழ்த்தினார்.

தொடர்ந்து கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தனது உரையில் வர்த்தகப் பிரமுகர்கள் திருவாளர்கள் சங்கர் நல்லதம்பி, ரமேஸ் மற்றும் ரூபன் ,ஆகியோரின் கூட்டு முயற்ச்சி வெற்றிகரமாக ஈடேறியது குறித்து தான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழ்நாட்டுப் பாடகர் வி. எம். மகாலிங்கம் அவர்கள் தனது நேரத்தையும் இசைத்திறனையும் இந்த இறுவட்டுத் தயாரிப்பில் அர்ப்பணித்துள்ளார் என்றும் அதற்கு பிரதியுபகாரமாக இந்த இறுவட்டை தயாரித்த எமக்கு அளித்தவர்கள் மூவரும் பாடகர் மகாலிங்கம் அவர்களுடைய தாயாரின் பெயரால் இந்த மேற்குலக நாடு ஒன்றில் ஒரு அடையாளமாக இந்த இறுவட்டை வெளியிடும் சந்தப்பத்தை வழங்கியிருப்பது என்பது எமது ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுக் கலைஞர்களை எவ்வாறு மதிக்கின்றார்கள் என்பதற்கு உதாரணமாக விளங்குகின்றது என்றார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பெற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ரொரன்ரோ மாநகரத்தின் உறுப்பினருமான கௌரவ ஜிம் கரிஜியானிஸ், மற்றும் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருவாளர்கள் லோகன் கணபதி மற்றும் விஜேய் தணிகாசலம் ஆகிய மூவரும் தங்கள் அரசுகளின் சார்பில் அனைத்துப் பாடக பாடகிகளுக்கு தங்கள் பாராட்டுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்ந்து வேலாயிமவன்-2 இறுவட்டில் அடங்கியுள்ள பாடல்களைப் பாடடிய இளம் பாடகிகள் அனைவரும் தமது பாடல்களை சபையோர் முன்பாக பின்னணி இசையோடு பாடி அனைவரையும் மகிழ்வித்ததோடு தங்கள் இசையாற்றலையும் நிரூபித்தார்கள். அதனைத் தொடர்ந்து இசைக்குழுவோடு சேர்ந்து பல பாடக பாடகிகள் திரையிசைப் பாடல்களைப் பாடினார்கள். இந்த மேடையில் தமிழ்நாட்டுப் பாடகர் திரு வி. எம். மகாலிங்கம், சுமார் நாற்பது பாடல்களுக்கு மேல் பாடினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழும் இசையும் இணைந்த ஒரு வெற்றி விழாவாக இடம் பெற்ற வேலாயிமவன்-2 இறுவட்டு வெளியீட்டு விழா அடுத்தடுத்த வருடங்களிலும் தொடர்ந்து இடம்பெறப்போகின்றது என்ற செய்தியையும் இதன் மூலம் மேலும் பல பாடக பாடகிகள் தங்கள் இசைத்திறனை வெளியுலகிற்கு காட்டப்போகின்றார்கள் என்ற செய்தியையும் செவிகளினால் கேட்டபோது எமக்கு உற்சாகமாக இருந்தது.
நள்ளிரவைத் தாண்டி இரவு ஒரு மணிவரை தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த வேலாயிமவன்-2 இறுவட்டு வெளியீட்டு விழா பற்றிய பேச்சு இன்னும் எத்தனை நாட்களுக்கு எமது காற்றலைகளில் இதமாகப் பறந்து வரப்போகின்றது என்பதேயே நாம் இனி கவனிக்க வேண்டும்.

விழாவின் இறுதியில் அன்றைய இறுவட்டு வெளியீட்டு வைபவத்தின் மூலம் சேரிக்கப்பெற்ற சுமார் 11000 கனடிய டாலர்கள் மூன்று சமூக சேவை நிறுவனங்களுக்கு விழா ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பெற்றன. அதில் ‚வர்மன் ஸ்மைல் பவுண்டேசன் அமைப்பிற்கு 3355 டாலர்களும் ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் ‚தமிழ் இருக்கை‘ நிதிக்காக 3355 டாலர்களும், ‚மண்வாசனை‘ அமைப்பிற்கா 3355 டாலர்களும் மேடையில் நேரடியாகக் கையளிக்கப்பெற்றன. அமைப்புக்களிற்கு பொறுப்பாக இருந்த பிரதிகள் மேற்படி நிதி அன்பளிப்புக்களை பெற்றுக்கொண்டனர்.

leave a reply