பட்டென்று
வரியொன்று
சிந்தைக்குள் நுழைந்தது.
சட்டென்று
விரல் மடங்கி
எழுத்தாக்கி நிமிர்ந்தது.
மெட்டொன்று
அழகாக மொட்டு
விரித்தது.
சிட்டொன்று
நினைவில் எழ
கவிதை அழகானது.
கட்டோடு
தமிழ் கொஞ்ச
வரிகள் நீண்டது.
தொட்தெல்லாம்
மெருகூட்ட
தொடாமலே சுக ராகம்
இசையானது.
தந்தியில்லா
வீணை மனசுக்குள்
தந்தியடித்தது.
ரசணைக்கு
ருசி சேர்க்க
என் தமிழ் துணையானது.
நினைப்பெல்லாம்
தமிழானதால்
அவளோடு என் காதல்
ஆழமானது.
ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி
அவளோடு..

Post navigation
Posted in: