Breaking News

சித்திரம் நல்ல சிலையாகலாம்

சித்திரம்கூட அழகிய நல்ல சிலையாகலாம்
சிந்தனையை கூட்டினாலே கவியாக்கலாம்
ஒப்பனையில் சிறப்பாக கற்பனை கலக்கலாம்
ஒளியின்றியே நிலவுகூட பகலில் தெரியலாம்

கவலைகளை கலையோடு நாம் பார்க்கலாம்
காலங்கள் கூடவே சிலநேரம் பகையாகலாம்
உதவிய எண்ணங்கள் கூடதட்டு தடுமாறலாம்
உதவாத பொருள்கள்கூடவே கொலுவேறலாம்

உறுதிகொண்ட உள்ளங்களும் சுமையாகலாம்
உண்மையும் உணர்வும் அங்கு பொய்யாகலாம்
பணமும் பந்தமும் எங்கும் நாடகம் போடலாம்
இன்றைய உலகில் நட்பு கூட திசை மாறலாம்

அதிகார தொனிகளும் ஆணவம் கொள்ளலாம்
அன்புகொண்டெங்கும் அமைதியை காணலாம்
பொன்னையும் பொருளையும் நாமே தேடலாம்
மண்ணையும் மனிதத்தையும் நாம்மறக்கலாமா

ஆக்கம் கவிஞர் கணேஸ்( பிரான்ஸ் )

leave a reply