Breaking News

எச்சரிக்கை..!

நேற்று வரை
நேசித்தவள்.
காற்றொடு கலந்து
வரும் அலை பேசி
குரலோடு நூறு கதை
சொன்னவள்.,
வட்சப் வைபர்
இன்னும் என்ன
விஞ்ஞான வருகையோ
அத்தனைக்கும்
அவளே குத்தைகைக்காரி..
இலவச இணைப்புகள்
இவளை இவாளாய்
இயங்க விட்டதில்லை.
இரவின் மடியிலும்
அதுவே அவள் துணை.
கட்டியவன் என்ன
கொக்கா? பக்கத்தில்
கட்டுக்கோப்பாய் அவளிருக்க
தூரத்தில் யாருக்கோ
தடவிக் கொண்டிருப்பான்
ரச் போணில்..
இன்ரநெற்றில் காட்சி
இன்ரறேஸ்ராய்
புது சமையல்..
சிங்கிளாய் புறப்பட்டாள்
சிங்கப் பெண் வித்தை காட்ட
யோசிக்க வேண்டாம்
வாசித்து முடிக்கும் வரை
பூஜிப்போம் புண்ணியவதி
பிழைக்கட்டும்..
கையினிலே ரச் போண்
பற்ற வைத்தால்
எரிவாயு அடுப்பினை
கிராம் கணக்கில்
சொன்னதெல்லம் போட்டாள்.
அடிக்கடி
படம் எடுத்தாள்
புது சமைல் அல்லவா.
நீள் கூந்தல் அழகி..
அடுப்பம் கதையருகே
கைத் தொலை பேசி
வெடித்தது…
குற்றுயிராய் இவள்….!
எதை எதை எங்கே
எப்போ எப்படி எப்படி
கையாள வேண்டும் என்பதை
கவனம் கொண்டால்…
கட்டிலும் தொட்டிலும்
மட்டில்லா மகிழ்வேட்டும்
தீயை தின்ன புறப்பட்ட விட்டிலாய் அலைந்து
தீக்கு இரையாவதேனோ..?

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி

2Mullai Mohan and 1 other

leave a reply