பிரான்சு கலை பண்பாட்டுக் கழகம் ‚சங்கொலி‘ போட்டியில் இருகலைஞர்களை கௌரவித்துள்ளது

பிரான்சு கலை பண்பாட்டுக் கழகம் நடாத்திய தேச விடுதலைப்பாடல் போட்டி ‚சங்கொலி‘ போட்டியில் மூத்த கலைஞரும் , நல் வழிகாட்டியுமான உயர் திரு கணேசு தம்பையா அவர்களுக்கும் , நடன ஆசிரியரும் , பல மேடை வெற்றி நடன தாரகைகளை உருவாக்கிவரும் தில்லைரூபன் மோகனரூபி அவர்களையும் ‚விடுதலை வேர்கள்‘ எனும் மதிப்பினை கலை பண்பாட்டுக் கழகம் வழங்கி வைத்திருக்கின்றது. தமிழ்த் தேசிய தொலைக்காட்சியான Ttn தமிழ் ஒளியின் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும் , நையாண்டி மேளம் எனும் நகைச்சுவை நாடகத் தொடரை 200 பாகத்திற்கு மேல் இயக்கி வெற்றி நடை போட்ட இயக்குனரும் , நாச்சிமார் கோவிலடி ராஜன் வில்லிசை குழு மூலமாக கதாநாயனாக வலம் வந்தவருமாவார். அது மட்டுமன்றி குறும்படங்கள் ,மேடை நாடகங்கள் என பல்வேறு வடிவங்களில் நடித்த,நடித்துவரும் உன்னத கலைஞர். பல் முக ஆற்றல்கள் பொருந்திய போற்றப்பட வேண்டிய கலைஞர். திருமதி மோகன ரூபி பணிவு, அடக்கம் என பண்புள்ள நடன ஆசிரியை . Ttn தொலைக்காட்சியில் நடன நிகழ்சிகளை தாயாரித்தும் இருக்கின்றார். அது மட்டுமல்ல என்னுடன் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். பல நடனத் தாரகைகளை உருவாக்கி வருகின்ற ஆசிரியை, தமிழ்த் தேசிய மேடைகள் பலவற்றிற்கு நடன நிகழ்ச்சிகளை வழங்கி வருபவர். ‚ஆதி பராசக்தி நடனப் பள்ளி‘ எனும் ஆடலகத்தை நிறுவியும், தமிழ்ச்சோலை பள்ளிகளிலும் தன் சார்ந்த கலையை புலத்து பிஞ்சு முதல் நங்கை வரை பரப்பி வாழும் ஒரு கலை அமுதம். சிறந்த மதிப்பளிப்பை பிரான்சு கலை பண்பாட்டுக் கழகத்தினர் இவர்கள் இருவருக்கும் வழங்கி வைத்துள்ளனர். வாழ்த்துக்கள் …. ?????