ஜெர்மன் ஒபகௌசனில் 23.12.2017 அன்று முற்று முழுதாக ஈழத்துக்கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சிகளோடு „வணக்கம் ஐரோப்பா‘ நெஞ்சம் மறக்குமா! நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.!!!

நமது ஆளுமைமிக்க கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்து வழங்கிய பாடல்கள்,நடனங்கள்,மற்றும் பல நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

பி.ப 16.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வுகள் மறுநாள் அதிகாலை 1.30 மணிவரை எந்த வித தொய்வுமில்லாமல் தொடர்ந்தது.

அரங்கத்தில் ஆறு அறிவிப்பாளர்கள் அன்பாகவும் புரிந்துணர்வுடனும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

பாடல்கள், நடனங்கள் வழங்கியவர்கள் அசத்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு!

மக்கள் சேவையே! மகேசன் சேவை! என்பதுக்கு அமைய :::::!
தேசநேசர்கள் நால்வர்கள் கைகோர்த்திருக்கிறார்கள் அந்த கைகோர்ப்பின் ஓசையே „வணக்கம் ஐரோப்பா „நெஞ்சம் மறக்குமா!

வணக்கம் ஐரோப்பாவின் வழிநடத்துநர்கள்!
1)திரு.முல்லை மோகன்
(2)திரு.பாபு கஜஸ்மென்
(3)திரு.R.G.மோகன்
(4)திரு.இரா ராஜசூரியர், இந்த நால்வரின் உழைப்பும் அபாரமானது!

மக்கள் தேவையறிந்து சேவை செய்யும் இவர்களுக்கு கைகொடுக்கும் வர்த்தக பிரமுகர்கள்,ஆன்மீகவாளர்கள்,சமூகஆர்வலர்கள்,ஊடககர்கள்,கலைஞர்கள், தேசநேசர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே!:::
தொடரட்டும் உங்கள் பணி !!
ஒளிப்படம் வணக்கம் ஐரோப்பாவில் கலந்து சிறப்பித்த பாடகிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்டது.
K.P.L.(29.12.2017)