துன்பம் ஏதும் அறியாது
துள்ளித் திரிந்த காலம் அது
வரப்பு வழி நடை பயின்றே
சிரித்திருந்தோம் நாளுமே

இயற்கை அன்னை வரமெல்லாம்
குறையின்றி அனுபவித்தோம்
பயிர் விளைந்த வயலெல்லாம்
கிளிகளோடு போட்டியிட்டோம்

நெற்குடலை நாம் ருசித்து
பிரம்படிகள் பட்டிட்டோம்
கதிர் சிரித்து அசைகையிலே
குருவிக்காய் காவல் நின்றோம்

கிராமத்தான் நாம் என்று
கீழாக உணர்ந்ததில்லை
பட்டணத்து மாந்தர்க்கும்
படியளந்தோம் பசியாற்ற

வந்தோரை வாழ வைக்கும்
வன்னித் தாய் புதல்வர் நாம்
விவசாயி புதல்வரென்றே
மார் தட்டி நிமிர்ந்திற்றோம்

 

வன்னியூர் இனியவள்