அனைத்துக் காதலர்களுக்கும் வாழ்த்துகள்.கோவிலுர் செல்வராஐா!


இன்று காதலர் தினம்..உலகில் உள்ள அனைத்துக் காதலர்களுக்கும் வாழ்த்துகள்….காதல் கைகூடி…கல்யாணத்தில் முடிய வாழ்த்துகள்
Happy Valentine’s day உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான, தகவல்கள் கூறப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர்தினக் கதைகள் தியாகம் நிறைந்தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம்.
வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதை இது. இது தவிர, அந்த அரசனின் மகள் அவள் வயதில் சின்னவளாக இருந்தாலும் பாதிரியார் வோலேண்டைன் அவர்களின்
மேல் கொண்ட அன்பால் அவர் மரணத்துக்கு முன் சிறையில் இருந்த பொழுது அவருக்கு அன்புக் கடிதங்களை கொடுத்தாள்.அந்த நடைமுறைதான் இன்றும் காதலர் தினத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஒன்றுமட்டும் தெரிந்துகொள்ளுங்கள்…காதல்…இனிமையானது அது
புனிதமானதும் கூட… அதை கொச்சைப் படுத்த நினைக்காதீர்கள்…
காதல் கைகூடவேண்டும்… அதை காதலிக்க முன்னரே அறிய
முற்படுங்கள்.. கைகூடாத காதலில் விழுந்து கடைசிவரைக்கும் கஷ்டப்பட்ட பலரை நான் எழுபதுகளில் இருந்தே அறிவேன்.
அதனால்..பல காதல் தோல்வி பாடல்களை வானொலிக்காக எழுபதுகளில்,எண்பதுகளில் என்னால் எழுதமுடிந்தது…