நடிகர் குணபாலனின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2017

பரிஸ் நகரில் வாழ்ந்து வரும்  நடிகர், பாடகர்,  அறிவிப்பாளர் என ஆற்றல் மிக்க நகைசுவைக்கலைஞர்  ரி .ரி.என்.னில் இருந்து  ஐ பி சி வரை சிறந்து நிற்கும் கலைஞர் தயாநிதி இணைவோடுதரணி எல்லாம் புகழ்பரப்பும்  கலைஞர் குணபாலன்

இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளகைள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய கலைஞர் அன்பிலும் பண்பிலும் சிறந்து கலைஞன் என பெருமைக்குரியது இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

கீழ் அவர் நண்பர்  கவியஞர்  நடிகர் எழுத்தாளர் என பல்துறை கலைஞர் தயாரிதி அவர்களின் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது

 

இனிய வாழ்த்துக்கள்..
………………………………….
கலை மகள்
கடாட்சம்
பெற்ற கலை மகன்
இவன்
அரங்கேறினால்
பார்வையாளர்
மனங்களில் சிரிப்பு
பொங்கி வழியும்.
நடிப்பில் துடிப்பும்
கலை நயமும்
நர்த்தனமாடும்.
உடல் மொழியும்
குரலும் கட்டியம் கூறும்.
காணாத அரங்கேது.
புலம் பெயர் கலைஞர்களில்
இவன் தனித்துவமானவன்.
கலைக்காகாக இவனது
தியாகம் அளப்பரியது.
பணிவும் துணிவும்
கலை நேசிப்பும் நிறைந்த
மானுடன். இவனால்
இவன் நட்பால் இவன்
துணையால் எனக்கும்
என் படைப்புக்களுக்கும்
உயிர்ப்புண்டு..
தொடர்க இவன் கலைப் பணி
வாழ்க நம் கலைப் பந்தம்
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள் நண்பா…
வாழிய நீ வாழியவே.
நட்புடன் நான்
தயாநிதி.