இளகிய மனம் கொடு இறைவா !கவிதை தே.பிரியன்

ஓ! பனைமரங்களே
கண் திறவுங்கள்……

உங்களுக்கா நாங்கள் அழுகிறோம்
பாட்டன் காலத்து பழ மரமே
உன் சுவை அழிக்க ஏன் மனம் வைத்தார்

பாவமான உன் மாந்தரை
பரிதாப சாவும் பற்றியதே
தேனான உன் கள்ளில்
தீன் சுவை மறைக்க
தீ வைக்க செப்பியதே

முப்பாட்டன் சொத்தடா என்
முன் நிற்கும் பனையே
பிற்பாட்டு பாடுவதற்கு
சுதி சேர்க்கும் பனங்கள்ளே

அழகிய பனம் தோப்பில்
அமர வரும் களிப்பு
இதை அறிந்திட அவர்க்கு
இளகிய மனம் கொடு இறைவா
அவர் முடிவினை தான் மாற்ற

எங்கள் நிலைமையை மாற்றாதே
நிமிர்ந்தால் எரியும் உன் தோப்பு
அன்று நினைப்பாய்
பனையும் நாமும் யாரென்று

ஆக்கம் தே.பிரியன்