அட மனிதா!கவிதை தே.பிரியன்

மானம் போகும் பேச்சுக்கள்
இந்நாளின் தாக்கங்கள்
பிணம் போகும் பாதையில்
தினம் போகும் பாதங்கள்
உன் இனம் அழிந்த நாள் மறைத்து
மணம் பிடித்தது துரோகங்கள்

அட மனிதா!
ஆணவம் உன் ஆயுதமா
மானம் உனக்கு விளையாட்டா
தானம் என்றால் தாழ்வா
களவு உனக்கு கற்பா
நாவுரைக்கும் இழி சொல்லை
நம்பி வாழ்வதா!
அட மூடனே ..
உன்னை நீயே அழிக்கின்றாய்
பிறகெப்படி அடுத்தவனை
திருத்துகின்றாய்.

கரை காணா படகுதான் நீ
காலம் முழுவதும் தத்தளித்தே சா
முடிந்தால் கரையேறு
இல்லையேல் உயிர் விடு
அதுவே உத்தமம்.

ஆக்கம் தே.பிரியன்