உன்னைப் பார்த்து
உலகம் ஆயிரம் சொல்லும்
அதனைக் கண்டு
அஞ்சிவிடாதே

தன்னம்பிக்கை மட்டுமே
உன் மூலதனம்
தளராத மனமே
உன் ஆயுதம்

துணிந்து நில்
வெற்றி உன் பக்கம்
வருவது வரட்டும்
வெற்றியும் உனதே

நேர்மையாக இருந்துபார்
நெருப்புக் கூட
எரியத் தயங்கும்
உண்மையாக இருந்துபார்
உலகமும் ஒரு நாள்
உன் காலடியில்

வென்று விடு
உன் வாழ்க்கைப் பயணத்தை
பிறந்தது இந்த,பூமியை ஆழவே
இறந்தோம் என்றில்லாது
சாதித்துப் போ
உன்னைப் போற்றும்
தூற்றிய வாயும் இங்கே..

ஜெசுதா யோ