விற்பனைக்கு…!


பூக்களில்லா
ந ந்தவனத்தில்
தேனை தேடும்
வண்டினங்கள்.

மலர்களில்லா
மாலைகளில்
பூவைத் தேடும்
பூவையர்கள்.

அலைகளில்லா
ஆழ்கடலில்
நீந்தத் தெரியாத
கலை மீன்கள்..

மழையில்லா
ஆகாயத்தில்
தூறலைத் தேடும்
தளிர்கள்..

களையிழந்த
காடுகளில்
சோடிழந்த
கலை மான்கள்..

ஆசைப்பட்டும்
மொட்டு விரியாத
ரோஜா செடிகளில்
காவலுக்கு முட்கள்..

ஒளியில்லா
விளக்குகளில்
தீயுண்ணும்
விட்டில்கள்..

விற்பனைக்கு
கற்பனைகள்
இங்குண்டு….

ஏலத்தில்
சொற்பனங்கள்
தினமுண்டு..

நரம்பறுந்த
நாவின்
நர்த்தனங்கள்
ஓசையின்றி
நகர வடிவம்
மாறுது வாழ்க்கை.

ஆக்கம் கவிஞர் தாயாநிதி