unlock குறும்படம் பரிசில் திரையிடப்படுகிறது

ஈழத்து மக்களின் வாழ்வையும் வலிகளையும் சொல்லும் திரைப்படங்கள் உலகைச் சென்றடையும் புதியகாலமொன்றை நோக்கிய பயணத்தில் ஒரு நல்வரவாக unlock குறும்படம் அமைந்திருக்கிறது.தென்னிந்தியத் தமிழ் திரையுலகில் அரிதாக வந்து சேரும் ஒரு சில ஈழத்துக் கலைஞர்களின் வரிசையில் இசையமைப்பாளராக அறிமுகமான நன்பர் நிரு Niru Nadarajah இந்த படத்தை எடுத்திருக்கிறார். கதைக்களத்தை அதன் அடையாளம் மாறாமல் காட்சிப்படுத்திய வகையில் இந்த படம் சிறப்புறுகிறது. எங்கள் பால்யம் போரையும் வாழ்வையும் பிரிதறியாது இரண்டரக் கலந்தது. இந்த படம், அது பேசும் நுண்ணியமான அரசியலைத் தாண்டி என் சிறுவயது நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது. இந்த படத்தை பெரும் திரையில் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நிருவின் முயற்சி சிறக்கட்டும். எங்கள் கதைகளைப் பேசப் புறப்பட்டிருக்கும் புதிய அலைப் படைப்பாளிகளில் நிருவும் நல்ல படங்களைத் தருவார் என்கிற அழுத்தமான நம்பிக்கையை இந்தப் படம் ஏற்ப்படுத்துக்கிறது.