
நாளைய எங்கள் தேசத்தின்
வளர்ச்சி எங்கள் கையிலே…
உறுதியான சிந்தனைகள்
மண்ணை என்றுமே
மறவாத உன்னதபற்று…
நம்பிக்கை கொள்வோம்
நல்வாழ்வு நமதாகுமென்று…
ஓட்டுப்போட்டபின்
உறங்கும் நிலைமறைந்து
நாட்டம்கொள் நாளைய
நல் வளர்ச்சிக்காய்…
பாட்டன் முப்பாட்டன்
பாடுபட்ட எம்மண்ணில்
வேற்றுக்காரன்
வேளான்மை செய்வதா…
தடுக்கத்திராணியற்றுத்
தடுமாறித்தடம்மாறும்
தரம்கெட்டவாழ்வுதன்னை…
தூக்கித்தொலைவில்ப்போட்டுத்
திடமாக முடிவுசெய்…
தீர்க்கமாக மனதிற்கொள்…
எங்கள் மண் எமக்கானது என…!!!
அன்புடன்
ஈசன் சரண்.
Visits: 116