மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் ‘கவசம்’ குறுந்திரைப்படம் வெளியீடு

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் தயாரிப்பில் மன்னார் ஊடகவியலாளர் எஸ். ஜெகனின் இயக்கத்தில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப் பட்ட ‘கவசம்’ எனும் குறுந்திரைப்படம் மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை (12) மாலை 3 மணியளவில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

குறித்த குறுந்திரைப்பட வெளியீட்டு விழாவில் விருந்தினர்களாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் , மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் , வட மாகாண முன்னாள் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, மன்னார் ரோட்டரி கழகத்தின் தலைவர் பிரியதர்சன் இமானுவேல் , நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் லூர்து நாயகம் புவனம் ஆகியோர் கலந்து கொண்டு குறுந்திரைப்படத்தினை வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்தனர்.

மேலும் குறித்த நிகழ்வில் மன்னார் நகர சபை உப தவிசாளர் ஜான்சன் , மன்னார் நகர சபை உறுப்பினர்கள் , நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த கவசம் குறுந்திரைப் படத்தில் பங்கு பற்றிய கலைஞர்களுக்கான விருதுகள், அன்பளிப்புகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

-குறித்த குறுந்திரைப்படமானது தற்போதைய சூழ்நிலையில், கொரோனா தொற்று காலப்பகுதியில் சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்குடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert