****அன்னையின் ஆசை****

கண்ணுக்குள் வைத்தல்லவோ
காத்து வளர்த்தேன் உன்னை.
காளைப்பருவமெய்தியதும் நீ
கடல் கடந்து சென்றாய் -நாலு
காசு பார்க்க வேண்டுமென்று.
கண்காணாத தேசம் போனாயே,
கடைச் சாப்பாடு தான் உண்பாயோ?
கவனம் காட்ட மாட்டாய் நீயென
கவளம் திரட்டியே சோறூட்டுவேன் .
கண்ணுக்கெட்டாத தூரத்தில் நீயும்,
கண்டதை திண்டு நோயாளியாகதே .
கண்ணை நான் மூடமுன்னே வந்திடு,
கண்ணா உனக்கு என்கையால் ஒருசிறு
கவளம் திரட்டி சோறு ஊட்ட ஆசையடா .
கவள நேசன்