அன்பின் அமுதசுரபி !கவிதை அ.பவளம் பகீர்

அன்பின் அமுதசுரபியவள்
அரவணைப்பில் இணையற்றவள்
இன்பமதை பரிமாறிடுவாள்
ஈகையளித்திடுவாள் நாளும் அன்பினை
உதட்டில் இனிமையானவள்
ஊற்றாய் பெருக்கெடுத்துடும் அன்பின் நதியவள்
எனக்காய் உயிர் வலி சுமந்தவள்
ஏற்ற இறக்கத்தில் கூடவே இருந்திடுவாள்
ஐயமின்றி தட்டி கொடுப்பவளே
ஒத்தடமாய் வாழ்வினில் ஆனவள்
ஓயாது உழைத்தே தேய்ந்திடுவாள்
ஔடதமாய் அத்தனைக்கும் இருப்பாளே
தொப்புள் கொடி அறுத்தாலும்
பெற்றதன் வலி பெரிதுபடுத்திடமாட்டாள்
கற்றவனாய் சபை அறிந்திட வைத்து
நித்தமும் மகிழ்ந்தே நிம்மதியடைவாள்
எத்தனை ஜென்மம் எடுத்திடினும் மீண்டும்
அம்மா நீயே என் வாழ்வின் வரமாக வேண்டுமே…!!

ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

அ.பவளம் பகீர்.