அமுதன் அண்ணாமலையின் ‚ரயில் ஓடுது. யாழ் ரயில் ஓடுது‘

அமுதன் அண்ணாமலையின் ‚ரயில் ஓடுது. யாழ் ரயில் ஓடுது‘

கண்ணன் – நேசம் இசையில், கவிஞர் இராசையாவின் வரிகளைப் பாடகர் அமுதன் அண்ணாமலை பாடுகின்றார். ‚ரயில் ஓடுது யாழ் ரயில் ஓடுது‘ இதுவாரை என் கண்களிலிருந்தும் தப்பியதோர் ஈழத்தமிழ்ப் பாப் பாடல். இப்பாடல் அமுதன் அண்ணாமலையின் முக்கிய பாடலாக நான் கருதுவேன். முக்கிய காரணம் இப்பாடல் அக்காலத்து யாழ்தேவிப்பயணத்தை ஆவணப்படுத்துகின்றது. ஆரம்பத்தில் பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவியில் பயணிகளுடன் சேர்ந்து நீங்களும் பயணிக்க ஆரம்பிக்கின்றீர்கள். விரையும் காட்சிகள், மரங்கள், பாலம், நீர்நிலைகள், வயல் வெளிகள், புகையிரத புஃபே, பல்வேறு கனவுகளுடன் , நினைவுகளுடன் பயணிக்கும் பயணிகள்.. அந்த வகையில் இப்பாடல் ஒரு காலகட்டத்து ரயில் பயண ஆவணம்.
https://www.youtube.com/watch?v=c1Me0LogFoU

இப்பாடலைத்தொடர்ந்து வரும் காணொளியும் உத்தரதேவியைப்பற்றியதுதான். ‚உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி‘ பாடியவர் ஏ.ஈ.மனோஹரன். அதுவுமோர் சிறந்த பாடலே.
அதற்கான காணொளி: https://www.youtube.com/watch?v=NprJmH0uSi8

முதல் பாடல் கறுப்பு வெள்ளையிலிருந்தால் இரண்டாவது பாடல் வர்ணத்திலுள்ளது.