அரியம் மாஸ்ரரின் ஆளுமையின் அழகிய கோலம் „ஆச்சி கிணத்தடியில“

ஜெர்மன் வாழ் தமிழ்ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற அரியம் மாஸரரின் „ஆச்சி கிணத்தடியிலே“ கிட்டத்தட்ட 8பெண்மணிகள் இந்த நாடகத்தில் நடித்திருந்தார்கள். நடித்த அத்தனை பெண்மணிகளும் தாங்கள் வருகின்ற காட்சிகளில் அசத்தினார்கள் கரகோஷங்களை அள்ளினார்கள். அதாவது புலம்பெயர் வாழ்வில் இடம்பெறும் சம்பவங்களின் கோர்வையே „ஆச்சிகிணத்தடியில“ இந்த காட்சியிலே ஒருஆணும் பெண்ணும் நீண்டகாலமாக நட்பை பேணுகிறார்கள்.ஆண் பெண் நட்பை கற்பை வைத்து களங்கப்படுத்தாதீர்கள் இது புனிதமானது, இப்படி தூய்மையான நட்பாக இருபாத்திரங்களும் அரியம் மாஸ்ரரால் சித்தரிக்கப்பட்டிருந்தது, மனைவியின் வதையோடு கணவன் தனது நீண்ட கால நண்பியை சந்திக்கிறான். நண்பி சொல்கிறாள் இவ்வளவு கால நமது நட்பில் எவ்வளவு விசயங்களை ஒளிவுமறைவின்றி பகிர்ந்திருக்கின்றோம் சொல்லுங்கள்::::மனம் திறக்கிறான் அவன் மன்னிச்சுக்கொள்ளுங்கோ மீரா :::வேறுவழிதெரியேல்லை ::::: என் சந்தோசங்கள் தொலைந்து நீண்டநாள் உங்களை சந்திக்கின்ற தருணங்களை தவிர்ந்து. எனக்கும் இதைச்சொல்ல சங்கடமாயிருக்கு ஆனாலும் சொல்லுறன் நீங்களும் திருமணமாகாத பெண் நானும் நீங்களும் ஏன் மீரா நல்லவாழ்க்கை அமைத்துக்கொள்ளக்கூடாது ::::நண்பி அதிர்ச்சியடைகிறாள் அதேநேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு சொல்கிறாள்:::: எவ்வளவு தூய்மையான நட்பு :::அந்த நட்பை கொச்சைப்படுத்திறியளா?:::::இது உங்கடை தவறில்லை உங்களுடைய மனைவியின்ரை தவறு அவ ஒழுங்காக சந்தோஷமாய் வாழ்ந்திருந்தால் நீங்கள் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்கமாட்டீங்கள் ::::எங்கடை நட்பை கொச்சப்படுத்தியிருக்கமாட்டீங்கள்::::::அந்த புனிதமான நட்பு களங்கப்படக்கூடாது;;;;;நான் உங்களோடு வைச்சிருக்கிறது உயரியநட்பு அது அப்படியே தொடரட்டும்.::::::::::இந்த பாத்திரத்தில் நண்பி மீராவாக நடித்திருந்த நடிகை தர்ஷி மிகவும் அற்புதமாக நடித்திருந்தார் அவருக்கான பாராட்டுக்களை நாடகமுடிவிலும் அந்த காட்சி நடைபெற்றபோதும் அவதானிக்கமுடிந்தது. ஜெர்மன் வாழ் நடிகை தர்ஷி, யாழ் பல்கலைக்கழக பட்டதாரி ஆனால் நாடகமேடை முதல்மேடை அனுபவமுதிர்ச்சியான நடிகைபோல் நடித்து அசத்தியிருந்தார். பார்த்து ரசித்த அனைவரும் பாராட்டி கொண்டாடினார்கள் நடிகை தர்ஷியை,
அந்த காட்சியில் ஜெர்மன் வாழ் நடிகை தர்ஷி, கே.பி.லோகதாஸ்.:::::::::(