*அலட்சியம் **

ஆறு மணிக்கு நான்
அலுவலகம் போக வேணும் ,
அஞ்சு மணிக்கு
அயர்ந்து தூங்கும் வேளை ‚
அலாரம் ‚வீல்ல் .என
அடித்தது தலைமாட்டில்.
அடித்து உடைக்க நினைத்தபடி ,
அலாரத்தை நிறுத்திவிட்டு
அலுப்பு முறித்த படி ,
அரை மனதோடு தேனீருக்கு
அடுப்பையும் , கப்பையும்
ஆயத்தம் செய்து விட்டு ,
அள்ளி ஒரு குளியல்
அடித்து விட்டு ,தேநீரை
அருந்திய படியே ,
ஆடை மற்றும் போது
அது எங்கே இது எங்கே என
அன்பு மனைவியோடு ஒரு
அவசர சண்டை வேறு ,
அனைத்தும் முடிய நேரம்,
ஆறுமணிக்கு இன்னும்
அரை மணி உள்ளது.
அடித்துப் பிடித்து
அடி வயிரு குலுங்க ஓடி
அலுவலகம்
அடைந்து விட்டேன்…
அங்கே தான் காத்திருந்தது
அதிர்ச்சியான விடயம் ஒன்று.
அட்டவணைப்படி எனக்கு
அன்று விடுமுறையாம்.
அலுவலகத்தின் நேர
அட்டவணையை நான்
அக்கறையோடு பார்காமல்
அலட்சியமாக இருந்தால்
அந்த இனிய நாளை
அநியாயம்
ஆக்கிவிட்டேன்
…அருள் சதீசன்