ஆண்டின் இறுதிநாள்.கவிதை ஜெசுதா யோ

இரவும் இங்கே
இரவாயில்லை
பகலும் இங்கே
பகலாக இல்லை

வருடம் முழுக்க
வளர்ச்சியில்லை
வளமான எதிர்காலமும்
எமக்கிங்கு இல்லை

தமிழன் என்ற பெயரோடு
தரணியெங்கும் வாழ்ந்தாலும்
அகதியென்ற பெயர்மட்டும்
மாறவுமில்லை

உயர்வு தாழ்வு
எனக்கில்லை
உன்னைவிட
உயிராய் இங்கு
யாரும் இல்லை

இதயமெங்கும்
உந்தன் விம்பம்
இருந்தும் நீ என்னோடு
பேசவில்லை

காலமெல்லாம்
காத்திருக்கேன்
கனவில் கூட
நீ வருவதில்லை

இயல்பாய் போனதோ..?
உன் இதயம் இல்லை
இரவல் போனதோ..?

நாளும் பொழுதும்
நகர்ந்து போனது
நாட்காட்டியும்
காளையிழந்து நிற்குது../

வருடத்தின் கடைசி நாள்
அழுதுவடியாது
ஆர்ப்பாட்டம் இல்லாது
அமைதியாக தன் இருப்பிடம்
பார்த்து காத்திருக்கிறது
தன் இறுதி இடம்
கழிப்பிடம் என்றே
கட்டியம் கூறி நிற்கிறது …/

நாளை புதிகாக பிறக்கும்
புதிய நாட்டிக்கு
வாழ்த்துச் சொல்லி
வழிவிட்டுப் போனது…

_  ஆக்கம் ஜெசுதா யோ