ஆனந்தமானவன்..

தந்தை வழியில்
மைந்தன்.
அண்ணாவியார்
குழந்தை ஆசிரியரின்
தலை மகன்.
கூத்துக்கலை இவன்
கூடப் பிறந்தது.

முப்பது வருடங்களுக்கு
முன்னர் மன்னார் ஆனந்தன்
சகாதேரர்களின் வீரனை
வென்ற தீரன் எனும்
கூத்தோடு பிரான்ஸ் கலைஞர்
ஒன்றியம் அறிமுகமாக்கினர்.

ஐரோப்பாவில் கூத்துக் கலை
பிறந்திட காரணமானவன்.
இன்றுவரை ஓயாது பணி.
ஊண் உறக்கம் மறந்து
உழைப்பையும் கொட்டி
உண்மைக் கலைஞனாய்
உணர்ச்சிக் கலைஞனாய்
அரங்கேறும் நாயகன்…

நல்ல சிந்தயைாளன்
தேச பக்தன்.எழுத்தாளன்.
இளம் ரசிகரகளையும் கவரும்
வகையில் இவனது கூத்துப்
பாடல்களின் மெட்டு அமையும்.
குறுகிய நேரத்தில் நெடும் கதைகளை
சுருக்கி சுகமாக்கி தரும் வல்லவன்.

பாரம்பரியக் கலைகள் அழியாது
காப்பவர்களில் இவனும் ஒருத்தன்.
ஐரோப்பிய அரங்கங்களில் இவன்
தடம் பதியாமல் இல்லை.
திருமறைக் கலா மன்றத்தில்
இணைந்து இன்றுவரை இவனது
கலைப் பயணம் தொடர்கின்றது.
பணி சிறக்க வாழ்த்துவோம்
வாரீர் வாழிய வாழியவே..

                          ஆக்கம் கவிஞர்தயாநிதி