ஆனந்தம்! கவிதை ஜெசுதா யோ

நீலநிற உடையணிந்து வானம்
கடல் போல் காட்சி
நீந்தும் வெண்முகில் அதன்மேல்
அதனைப்பார்த்த இன்ப வெள்ளத்தில்
பசும்தளிர்களெல்லாம்
தலையசைக்கும்…

என்னவன் கோபமும்
என்னிடம் என்பது
சிற்றிடையோடையாய்
சில மணித்துளிகளே

அளவில்லா அன்பில்
ஆனந்தம் தந்து
ஆசையாய் மொழிபேசும் போது
அந்த இயற்கையாய் நானிருக்கேன்

எத்தனை எத்தனை
இன்பம் கண்டோம்
இப்புவிதனில் நாமும்
இரவுகள் தூங்கவில்லை
என்னவன் அழகில்

நட்சத்திரக் கூட்டம்
நடுநிசியில்
காதலோடு காத்திருந்து
கதைபேசிப் போகும்

வெண்ணிலவும்
அதனையெண்ணி
மகிழ்ந்து
தூக்கம் கலைந்து
எழும்

பகலும் இரவும்
ஆதவன் போலிவன்
முகம் பார்த்து
அகம் குளிர
ஆயுள் போதாதே
உன்னவள்…என்றும்

ஆக்கம் ஜெசுதா யோ