ஆயிரக்கணக்கான படப்போட்டி ஒன்றில் ஒரு திரைப்படம் இத்தனை விருதுகளை தனக்கென எடுத்துக் கொள்கின்றது/

ஈழத்தின் கதை ஒன்றை அதன் மக்கள் 158 பேர் இணைந்து Crowdfunding முறையில் பணமிட்டு உருவாக்கிய ”வெந்து தணிந்தது காடு” திரைப்படம் சர்வதேச விழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.திரைப்படத்தின் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடுவதற்காக பலர் காத்திருந்தாலும் அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது என்பதால் Official Selection கிடைத்தவற்றைப் பகிராமல் அவற்றில் விருது கிடைத்தால் மட்டும் பாகிர்ந்தவண்ணமிருந்தேன். ஆயிரக்கணக்கான படங்கள் பங்கு பற்றிய போட்டி ஒன்றில் ஒரு திரைப்படம் இத்தனை விருதுகளை தனக்கென எடுத்துக் கொள்கின்றது என்பதில் இப்படத்துக்காக நம்பி முதலிட்டவரும் உழைத்தவரும் பெருமைப்பட வேண்டிய விடயம் தானே.India வில் இடம்பெறும் Uruvatti Film Festival இல் ”வெந்து தணிந்தது காடு” திரைப்படம் 5 விருதுகளை கையகப்படுத்தியுள்ளது.1) Best Director2) Best Writer3) Best Producer4) Best Debut Feature Film5) Best Posterஇவற்றில் முன் 4 விருதுகளிலும் நான் சம்மந்தப்பட்டிருந்தாலும் 5 ஆக குறிப்பிடப்பட்டுள்ள விருதைத் தான் நான் மிக முக்கியமானதாகப் பார்க்கின்றேன்.படங்களில் கூட ஏதோ ஒரு மூலையில் தான் அந்தப் பகுதிக்குரியவர் பெயர் இருக்கும். நான் கூட இப்படம் இப்படி ஒரு விருது எடுக்கும் என்று துளியளவு கூட யோசிக்கவில்லை என்பதை வெளிப்படையாகவே சொல்கின்றேன்.அந்தவகையில் இப்படத்துக்குரிய சுவர்ப்படத்தை வடிவமைத்த Sazi Balasingam க்கு எம் வாழ்த்தை பகிர்ந்து கொள்வோம். ஏற்கனவே வெடிமணியமும் இடியன் துவக்கும் Poster ஐ இவர் தான் வடிவமைத்திருந்தார்.எம் திரைப்படத்தின் அவ் உத்தியோகபூர்வ சுவர்ப்படம் மார்கழி மாதம் 1 ம் திகதி வெளியிடப்பட இருக்கின்றது என்பதை மனமகிழ்வுடன் அறியத்தருகின்றேன்.இத்திரைப்படம் பெற்றுக் கொள்ளும் 8 வது சர்வதேச விருது இதுவாகும்.குறிப்பு – திரையரங்குகள் வழமை போல் இயங்காத நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு என்பது பெரும் சாவாலாகவே அமையப்போகின்றது. எமது வெற்றியானது என்னோடு இயங்கும் பலருக்கான புதிய பாதையாகும். இத்திரைப்படம் பற்றி உங்கள் நண்பர்களுக்கு இப்போதோ பகிர்ந்து வைக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.நன்றிச் செதுக்கலுடன்அன்புச் சகோதரன்மதிசுதா