ஆழ்ந்த அறிவூடைய ஒலிபரப்பாளர் பத்மினி பார்வதி கந்தசாமி

புலத்திலே பல பெண்கள் ஒலிபரப்பு துறையில் மிளிர்ந்து காணப்பட்-டதை நாம் அறிவோம். அவர்களுக்கான பட்டியல் நீளமானது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் பணியாற்றியது மட்டுமன்றி வாழ்நாளுக்கென முத்திரையூம் பதித்துள்ளனர். ஆனால் புலம்பெயர் தேசத்திலோ அந்தளவிற்கு இல்லையெனிலும் ஒரு-சிலர் ஒலிபரப்புதுறையில் மிளிர்ந்துள்ளதையூம் நாங்கள் மறந்துவிட முடியாது. அந்தவகையில் ஆரம்பகால புலம் பெயர் வாழ்வில் ஒலிபரப்பு துறையில் தனது கால்களை உறுதியாகப் பதித்து இன்று வரை சேவையாற்றிவரும் ஓர் ஊடகப் பெண் பற்றியதாக இந்தப் பதிவு அமைகின்றது.

நேர்த்தியான நேர்முகம், கணீரென்று ஒலிக் கும் குரல், வசீகரிக்கும் புன்னகை, ஆழமான தேடல்கள் நிறைந்தவர் பத்மினி கோணேஷ் அவர்கள். கனடாவின் முதல் தமிழ்ப் பெண் ஒலிபரப்பாளராகத் திக ழும் இவர், தொலைக்காட்சியில் புதினம் பகிர்பவராகவூம், நேர்காணல் செய்பவராகவும் ‘றேடியோ ஏசியா’வின் இணை நிறுவனராகவும் திகழ்கின்றார்.

பத்மினியின் அப்பா நற்குணானந்தன் உடுவிலையும் அம்மா லீலாவதி கண்டியையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் வாழ்ந்தது திருகோணமலையில். இவர்களுக்கு பத்மனி, நேதன், கணேஷ், குமுதனி, சிவரஞ்சனி என்ற ஐந்து பிள்ளைகள் உள்ளனர். பத்மினி மூத்த புதல்வியாவர்.

கோணேஷ் அவர்களை கைப்பிடிக்க முன்னர் பத்மினியின் வாழ்க்கை உடுவிலில் அவரது அப்பம்மாவுடன் தான் கழிந்தது. உடுவில் ஆயnளை கல்லூரியிலும் பின்பு மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார். பிரத்தியேகமாக சங்கீதம், வயலின், நடனம் ஆகிய கலைப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார். சகோதரங்களையும் பெற்றாரையும் பிரிந்து அப்பம்மாவுடன் உடுவில் சூழலில் வாழ்ந்த உணர்வு இனிமையான நினைவென நினைவு கூர்ந்தார் பத்மினி. விடுமுறைக்கு திருகோணமலைக்குச் செல்வதையோ மீண்டும் திருகோணமலையில் கன்னியாஸ்திரி மடப் பாடசாலையில் 14 வயதில் சென்று பயின்றதையோ தன் நினைவில் நல்ல ஒளிபடைத்த காலம் எனக் கூறமுடியவில்லை என மேலும் கூறினார். இதற்கு பாடசாலை சூழல், அப்பம்மாவைப் பிரிந்தமை காரணங்கள் எனினும் தனது சகோதரங்கள் ஆங்கில மூலம் கல்வி பயின்ற போது தான் அவர் களிலும் தாழ்ந்தவர் என்ற உணர்வு தன்னுள் குடிகொண்டிருந்தமை உளப்பிரச்சினையாக இருந்தது எனவும் வேதனைகொண்டார்.

14 வயதில் இருந்து திருகோணமலையில் வாழ்ந்தபோது கோணேஷ் சங்கீதக் கலை, வாத்தியக் கலையில் ஆர்வம் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். அவரது வீடு பத்மினி பாடசாலை செல்லும் வழியில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்திக்கவூம், இதனால் காதல் வயப்படவும் காரணமானது. இதன் பலனாக இள வயதிலேயே திருமணமும் முடித்துக்கொண்டனர். விவாகமாகி அடுத்த வருடமே குழந்தை பெற்றெடுத்ததால் கல்வி தொடர முடியாமல் போனதையிட்டு இன்றும் மனம் வருந்துவதாக குறிப்பிட்டார்.

பத்மினி படிக்க வேண்டும் என்ற ஆசை மேலிட்டவராகவே இருந்தார். எனினும் ஜேர்மனிக் குடிபெயர்வு, தமிழ் அரசியற் புயலில் சிக்குண்ட கலை வாழ்க்கை என அவர் படிக்க முடியாத சூழலே ஏற்பட்டது. 1986ல் ஜேர்மனியில் ராதிகா, பிரதீப் என்ற இரு பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த இவர் 1990ம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தார். கனடாவில் சென்ரானியல் கல்லூரியில் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். மேலும் மேலும் கல்வியில் புலமைப்பட்டம் பெறவில்லை என்ற ஏக் கம் இன்னமும் அவரிடம் உண்டு.

ஒலிபரப்பு, தொலைக்காட்சியில் சேவை செய்யும் பொழுது தாம் பேசும் விடயம் பற்றிய அறிவு ஞானம் இருக்கவேண்டும் எனவும் நேர்காணல் காண்போரிடம் செய்யும் செவ்வி பற்றிய பூரண ஞானம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பத்மினி வாசிப்புத் திறனை வளர்த்துக்கொண்டார்.

ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் விடுதலை வேட்கைக்கான ஐரோப்பிய மேடை நிகழ்ச்சிகளை 1985, 86ல் கோணேஷ் நிகழ்த்தினார். சொந்தமாக வரிகள் எழுதி, இசை அமைந்து, அதனைப் பாடலாக்கினார். பத்மினியும் மேடையில் அதற்கான அறிவிப்பாளராக பல இடங்களில் சேவை ஆற் றினார். பக்கபலமாக இருந்தார். அப்போ, சில குறிப்பிட்ட நகரங்களில் வாழ்வோர் அதன் எல்லை தாண்டிப் போகமுடியாத கட்டுப்பாடு இருந்தபோதும், வெவ்வேறு நகரங்களுக்கும் சென்று மேடை நிகழ்ச்சிகளில் இணைந்து செயற்பட்டார். ஞான பண்டிதனுடன் இணைந்து பத்மினி மேடை ஒலிபரப்புக்களை மேற்கொண்டார்.

வானொலி நிகழ்ச்சிகளை ஜேர்மனியிலும் பின்பு கனடாவிலும் தொடர்ந்தனர். கனடாவுக்கு வந்தபின்பு சீவியச் சிக்கலில் உழல வேண்டிய நிலையால் முதல் 2 வருடங்களும் வானொலி பற்றிச் சிந்திக்கவில்லை. 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘இராகப் பிரவாகம்’ வானொலி ஆரம்பத்தில் ½ மணித்தியால ஒலிபரப்பாக இருந்தது. தொடங்கிய ஒரு வருடத்தில் 2 மணித்தியால ஒலிபரப்பாக வளர்ந்துஇ பின் (1997) மொன்றியாலில் 24 மணி நேர ஒலிபரப்பாகியது.

இதன் தொடர்சியாக 2001 ஐவூடீஊ (ஐவெநசயெவழையெட வூயஅடை டீசழயன ஊயளவiபெ) எனும் தொலைக் காட்சியை ஆரம்பித்து ஐரோப்பாவூக்கு நிகழ்ச்சி தொகுத்து அளிக்கப்பட்டது. மகன் பிரதீப்பின் தகவல் தொழில்நுட்பக் கல்வியானது தொலைக்காட்சி வானொலி வளர்ச்சிக்கு உதவியது. ஆனாலும் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மூலிகை வைத்தியம், சித்த வைத்தியம் போன்ற தமிழர் பாரம்பரிய வைத்திய முறைகளில் இருந்த ஆர்வ மிகுதியால் நூல் நிலையங்கள் சென்று அது தொடர் பான நூல்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். இயற்கை வைத்தியத்தினால் கவரப்பட்ட பத்மினி மூலிகைகள் பற்றி ஏராளமான தகவல்களைத் தன்னகத்தே வைத்திருக்கின்றார். எங்களது சித்த வைத் தியம் பற்றி வானொலி நேயர்களுக்கு கை வத்தியராகவும் திகழ்கின்றார்.

வன்முறையற்ற வாழ்வையும் இயற்கையையும் இயற்கைச் சூழலையும் பெரிதும் விரும்பும் பத்மினி தான் வாழும் வீட்டில் விதவிதமான மரங்களுடன் பறவைகளும் மிருகங்களும் சேர தனது வீட்டுச் சூழலை வித்தியாசப்படுத்தியுள்ளார்.

உளவள ஆலோசனைகளைத் தொடர்ச்சியாக வானொலியில் வளங்குவதற்கான சந்தர்ப்பத்தையும் பத்மினி ஏற்படுத்தித்தந்துள்ளார்.

உளவள ஆலோசனைப் பயிற்சியை ‘சாந்தியம்’ நிறுவனத்தில் பெற்ற லலிதா புரூ டியின் நட்பு பத்மினி கோணேசுக்கும் கிடைத்தமை ஒரு நற்பேறு. ரில்லியம் பவுண்டேசன் நிதி உதவியுடன் ‘ஆரோக்கிய மஞ்சரி’ நிகழ்ச்சியை றேடியோ ஏசியாவில் நிகழ்த்த உதவினார். கனடாவில் தற்கொலைகள் அதிகமாக இடம்பெற்றிருந்த அன்றைய காலத்தில் அதனைத் தடுப்பதற்கு – குறைப்பதற்கு இந்த நிகழ்ச்சிகள் பெருமளவு உதவியது. இந்நிகழ்ச்சி காலம் சென்ற உளவள வைத்திய கலா நிதி சூரியபாலன் அவர்களால் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட ஒன்று.

பத்தமினி கோணேஷ் தம்பதியினர் ‘தமிழர் தகவல்’ விருது பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பணிப்புயல்’ என்ற நாடகத்தை நான் தயாரித்த போது அதற்கான இசை அமைப்பை பத்மினி கோணேஷ் செய்து உதவினர் என்பது இவ்விடத்தில் குறிப் பிடப்படவேண்டியதே.

கனடாவில் ஒலிபரப்புக்கலையை ஆரம் பகாலத்தில் உணர்ந்து அதை நேர்மைத்திறனுடன் ஐரோப்பாவுக்கும் பரவச் செய்து தேமதுரத் தமிழ் ஓசையை உலகம் பயன் பெற வைத்த பத்மினியை
வாழ்த்துவோம்.!

Share this on