இடம் மாறிய பூஞ்செடிகள்

அகண்டு விரிந்த ஆகாயம்
நீண்டு பரந்த நிலப்பரப்பு
சூரிய வெளிச்சம்
சுத்தமான காற்று
மழையும் பனியும்
மனதுக்கு உவப்பாக..
பற்பல வர்ணங்கள்
பலவகை இனங்கள்
இவற்றுக்கு நடுவே…
திறந்த வெளியில்
சிறப்பான வாழ்வு
சுதந்திரத்துடன்
சுகமாக வாழ்ந்தேன்.
கயவன் ஒருவன்
எனைக் கண்டான்;
களிப்பு மேலிட
வலம் வந்தான்
ஆசை கொண்டவன்
காசைக் காட்டி
அணைத்துச் சென்று
அறையினில் அடைத்தான்
அழகினை ரசித்தான்.
அவனை நம்பியே
என் வாழ்வு அமைந்தது
இயற்கையை மறந்தேன்
செயற்கையை ரசித்தேன்;
சூழ்நிலைக்கேற்ப
வாழ்வினை அமைத்தேன்
அற்ப சுதந்திரம் சிறு
அறைக்குள் மலர்ந்தது.

மணியம் டோட்முண்ட்