இடைவெளிகள்.!கலைஞர் தயாநிதி

ஆரம்பம்
கூட்டு குடும்பமாக
குதூகலித்து.
காலம்
நகர நாகரீக
முன்னேற்றம்..
தனிக்
குடித்தனம்
கோலோச்சியது.
பிறக்கும்
பிள்ளைகள் தொகையும்
தொலைந்து..
தனிமை
வாழ்வும்
கவ்விக் கொண்டது.
விஞ்ஞானம்
வீட்டுக்குள் வித்தைகள்
காட்டியது.
உலகம்
சுருங்கி உள்ளம்
கைக்குள்….
வேற்றுக்
கிரக வாசிகளாய்
விரிசல்கள்..
தனிமை
சூழ தப்புக்களும்
அனாகரிகமும்
கூடு கட்டியது..
மூலைக்
கொருவராகி
முக்காடு போட்டு
விருத்தி குறைந்தது…

கலைஞர் தயாநிதி