இறுதி ஆசை!கவிதை ஜெசுதா யோ

ஆசையென்று எனக்கு
பெரிதாக ஏதுமில்லை
இறக்குமுன் நான்
செய்ய வேண்டும்
கையேந்தி நிற்காத
வாழ்வியலை நான் காணவேண்டும்

இறுதி ஆசையென்றெனக்கில்லை
இருந்தும் நாடுவேன்
அநாதையற்ற உலகம் வேண்டும்
பெண்ணென்று எண்ணி
தெருவில் விடாதே
ஆணினமே ஆசைக்காக
பிள்ளையைப் பெறாதே
அம்மா என்ற புனிதம் கெடாது
பெற்றுவிட்டால் பிள்ளையை
வீதியில் விட்டுச் செல்லாதே…!!

ஏழை பணக்காரன் என்ற
ஏற்றத்தாழ்வு இல்லாதொழிய வேண்டும்
சமாதானம் மட்டும் என்றும்
நிலையாக நான் காணவேண்டும்

யுத்தமென்று சொல்லி
கொத்துக் கொத்தாய்
உயிர்கள் இறத்தல்
இல்லாது போகவேண்டும்

இனம் மதம் மொழியென்று
பாகுபாடின்றி
அன்பென்ற ஒரு குடையின் கீழ்
அகிலம் நான்காண வேண்டும்
பெரிதாக ஏதுமில்லை
ஆசையென்று சொல்லவில்லை
இருந்தும் நான் காணவேண்டும் …

ஏழையில்லாத உலகம் வேண்டும்
பணக்காரன் என்ற மமதையில்லாத
ஊர்பார்க்க வேண்டும்
உயர்வென்றும் தாழ்வென்று
இல்லாது ஒழிய வேண்டும்
எல்லாரும் சமமென்ற நாளை
நான் காண வேண்டும்

  ஆக்கம் ஜெசுதா யோ