இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் முதல் வாழ்த்துக்களோடு…..

நாமறிந்தவரை நாடறியச்செய்வோம்.!!!

இலக்கியச்சோலையின் முதற் பயிர் !

இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் முதல் வாழ்த்துக்களோடு…..

பன்முக ஆற்றலாளர் யேர்மனி சோஸ்ற் – ஆசிரியை திருமதி இந்து தெய்வேந்திரம்.

ஈழத்து மல்லாகம் மானிமனை ராமலிங்கம் அன்னலட்சுமி ஈன்ற முத்துக்களில் ஒருவர். ஆரம்பக் கல்வியை மல்லாகம் இந்துக்கல்லூரி….. உயர்தரம் வரை ராமனாதன் மகளிர் கல்லூரி…….கல்வியிலும் கலைகளிலும் மேடைகள் பல, கண்டவர் கண்களைக் கொள்ளை கொண்டவர்.புலம் பெயரமுன் தனியார்துறை கல்வி நிறுவனத்தில் ஆசிரியப்பணி.
1985ல் யேர்மனியில் பதியம் ..புன்னாலைக்கட்டுவன் வடக்கு தந்த தெய்வேந்திரம் கரம் பற்றி மீண்டும் மிடுக்கோடு கல்விப்பணியும், தமிழ்ப்பாடசாலை பொதுப்பணியும்.சோஸ்ற் நகரத்தில், கல்வி கலாச்சார அமைப்பு , அதனூடு பல பணிகள் தொடுப்பு.
ஆன்மீகப் பணி ,
கல்வி, கலை,விளையாட்டு என ஓயாத பணி.கணவரும் நண்பர்களும் கரம் கொடுக்க,அண்மையில் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா கண்டவர்,.தன் பணியை ஊருக்குள் மட்டும் முடக்காது, உ.த.ப.இயக்கம்,உலகத்த்மிழ்ப் பாராளுன்மன்றம் மகளிர் பிரிவு ,யேர்மன் சர்வதேச நாட்டவர் குடியேற்றச் சபை,என பணிகள் ஏராளம்….

ஓய்வில்லா உழைப்பு அவருக்குக் கிடைத்ததோ அளவிலா ஆத்மதிருப்தி.நாடகம், வில்லுப்பாட்டு, கோலாட்டம், கும்மி என தமிழர் கலைகள், அத்தனையும் அத்துப்படி, அத்தனையும் அள்ளிக்கொடுத்தார், தன் எண்ணப்படி.அனைத்துமே இலவசமாக சொன்னபடி..அன்புக்கணவரின் ஒத்துழைப்பும், உறுதுணையும்,நட்பு வட்டத்தின் அன்பும் நம் எதிர்காலச்சந்ததிகளுக்காக, இருக்குவரை பணிசெய்வதே என் பெரு நோக்கமெனக்கூறும், சகோதரி இந்துவை நாமும் பாராட்டுவோம் பணிசெய்ய வாழ்த்துவோம்…!!!