இலங்கையில் தமிழ் நாடகம் …..3

இலங்கை தமிழ் நாடகம் பற்றி எழுதுவதானால் நிறைய விஷயங்கள் எழுத வேண்டும்..தனியாக எமது நாடகங்கள் பற்றியது மட்டும் அல்ல… கொழும்பில் எங்கள் இந்த இரு நாடக குழுவை விட வெறும் பிரபலமான நடிகர்கள் நண்பர்கர்…டீன்குமார்..கலைச்செல்வன்.மோகன் குமார்..ராஜசேகர்.ஹெலன்குமாரி..மாத்தளை காத்திகேசு..லடீஸ் வீரமணி ..எம்.எம்.எ .லதீப்.கே,எ ஜவாகர்..பரத் சுந்தரராஜன்.,சுபேர் ஹமீட் போன்ற இயக்குனர்கள் பற்றி பின்னர் எழுதுகிறேன்
——————————————————————————————————-
இப்போது தொடர்கிறேன் ..திரு.வீரசிங்கம் அண்ணா அறிவித்தபடி அடுத்த வாரம் நாடகம்.. எல்லா ஒழுங்குகள் ..விளம்பரம் தடபுடலாக..இந்த நிலையில் புதிதாக பிறந்த எனது மகளை பார்க்க யாழ்சென்றேன்…அடுத்த நாள் மாலையில் கொழும்பில் நாடகம்..விடிந்தவுடன் யாழ்தேவியில் கொழும்பு செல்லவேண்டும்.இந்த நிலையில் இரவு எனது மனைவியின் பேரனார் உயிர் ஊசலாடியது.. நேரம் இரண்டு மணி தேநீர் கொண்டு வந்த எனது மனைவி என்னிடம் சொன்னார் ..அப்புக்கு சேடம் இழுக்கிறது ,,இன்னும் சிறிது நேரத்தில் உயிர் போய்விடும் ,அதனால் இப்பவே வெளிக்கிடும் என்றார்..5.30 க்கு பஸ் ..6.15 க்கு யாழ்தேவி..மூன்று மணி நேரம் தெருவில் நின்று கொழும்பு சென்றேன்.. அன்றைய மாலை நாடகமும் அதே நிலை.. மக்கள் கூட்டம்…,, அடுத்து எங்கு நாடகம் போடுவது.யாழ்ப்பாணம் தான் என தீர்மானிக்கும் போது…ஒரு டெலிபோன் அழைப்பு கணேஷ் அண்ணைக்கு..அது அப்போதைய கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆனந்தசங்கரி அண்ணாவிடம் இருந்து..இந்த நாடகத்தை கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் ..புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய கட்டுமானப்பணி நிதியத்துக்காக ..நாடகம் நடத்த வீரசிங்கம் அண்ணா ஒத்துக்கொண்டார்..இங்கு நான் திரு..ஆனந்தசங்கரி அன்ன பற்றி சொல்லவேண்டும்,,,மிக அன்பாக பழகுவார்..இவர் ஆரம்ப கால லங்கா சம சமாஜி கட்சி உறுப்பினர்.. அக்கட்சியில் தேர்தலில் கேட்டு தோல்வியுற்றவர்..பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து.வெற்றி பெற்றார்.. கூட்டணியில் இருந்தார்…பலரும் .தோழர் அது இது என்று சொல்கின்றனர்…நான் அறிந்தவரை..தமிழ் அரசியவாதிகளில் உண்மையான சமத்துவம்.தோழர்..சகா..எல்லாம் அவர் தான்..
சரி நாடகம் கிளிநொச்சி ,தொடர்ந்து அடுத்த நாள் யாழ்பாணம்…
காலையில் City Transport..பஸ் மூலம் கிளிநொச்சி நோக்கிய பயணம்..பஸ்ஸில் மேலே அரங்கு அமைக்க..மரங்கள் கிடுகு..பக்கவாட்டில் ..புளுகர் பொன்னையா பதாகை …மாலை மூன்று மணிக்கு கிளிநொச்சி வந்து சேர்ந்தோம்…எங்கு சென்றாலும் மேடை.. ஒலி.ஒளி,ஒழுங்குகள் சரியாக உள்ளனவா என்று கவனிப்பது என் வேலை..அதன் பின்னர் தான் ஒப்பனை செய்வேன்…அரங்க அமைப்பு தம்பி..அவர்தான் கதிர்காமத்தம்பி..நினைத்ததை மேடையில் உருவாக்குவார்..எட்டு .உளவு இயந்திர பெட்டிகள் மேடையாக்க பட்டு சூடடிக்கும் படங்கு போட்டு மூடப்பட்டு இருந்தது..நாடகம் எட்டு மணிக்கு மேல்தான்..இருளும் போது..பார்த்த இடமெல்லாம் உளவு இயந்திரங்கள்..மாட்டு வண்டி ..துவிசக்கர வண்டிகள் என….உண்மையை சொல்கிறேன் 2000 திற்கு அதிகமான ரசிகர்களுடன்… அமோக பாராட்டுக்களுடன் முடிவு பெற்றது…அது போல் நாம் எந்த நாடகம் கொழும்பில் போட்டாலும் அடுத்த வெளிநாடகம் கிளிநொச்சி விளையாட்டு மைதானம் தான்.1983 ஜூன் மாதம் உமையாள் புரம் தேங்காய் லாரி குண்டுவெடிப்பு நாள் வரை……
பட்டி தொட்டி எல்லாம் இந்த நாடகத்தின் பேச்சு..வாடகை.கார்கள்,பஸ்..தெரு மதவு,,சுவர்கள்..பத்திரிகைகள் ,வானொலி… யாழ் பஸ் நிலைய மணிக்குரல்… அங்கு தற்போதைய பிரபல அறிவிப்பாளர் எஸ்.கே.ராஜன் பணிபுரிந்தார் ..யாழ் வீரசிங்க மண்டபத்தில் இரண்டு காட்சிகள்..பிற்ப்பகல் 2.30 மாலை 6.30,, என்ன சிந்திக்கிறீர்கள் என புரிகிறது.. நாடகம் மெட்னி யா என..முதல் தடவையாக சாதித்தோம்..யாழ் ராணியில் ..பணமா பாசமா..100 வது நாள்… அங்கு சனம் இல்லை..மாலைக்காட்சிக்கு மக்கள் முற்றவெளி முழுக்க பறந்து இருந்தனர்…இந்த நாடகத்தை பார்க்க வந்த சாவகச்சேரியை சேர்ந்த ஆசிரியர்..ஒரு நடிகரும் கூட,, அவர் பெயர் ஆர்.தி.சுப்பிரமணியம்..சொன்னார் தான் பஸ் நிலையத்தில் இருந்து வீரசிங்க மண்டபத்திற்கு வரும் ஒழுங்கையில் வரும்போது மக்களில் சிரிப்பொலியில் மண்டப கூரை மேலை போய் கீழே வந்ததாக…இப்படி ரசிகர்களை சந்தித்தவர்கள் நாங்கள்..கூட்டத்தில் எஞ்சி இருப்பவன் நான்.. இதை நம்பி தான் …இது காலம் திரைப்படத்தை தயாரித்தேன்..இயக்கினேன்,,இன்னமும் நம்பிக்கையுடன்… மீண்டும் நாளை..